சிவனொளிபாதமலைக்கு செல்லும் யாத்திரிகர்களுக்காக விசேட அரச பேருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக பலாங்கொடை போக்குவரத்து சபை முகாமையாளர் தர்ம ஸ்ரீ ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த பேருந்து சேவையானது பலாங்கொடையில் இருந்து நல்லதண்ணி வரை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறுஇருக்கையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இந்த விசேட பேருந்து, சேவையில் ஈடுபடுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் படி, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 4.30 க்கு பலாங்கொடையில் இருந்து புறப்படும் பேருந்து பொகவந்தலாவை வீதியின் ஊடக நோர்வூட் பிரதான நகரத்தை தொடர்ந்து இரவு 8 மணிக்கு நல்லதண்ணியை சென்றடையும் எனவும் அறிவித்துள்ளார்.