காலியில் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பயங்கர சம்பவம் நேற்று (02) காலி - இக்கடுவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
அத்தோடு மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய ஜயலத் குமாரசிறி என்ற நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
அவரது வீட்டுக்கு அருகில் உள்ள ஒழுங்கையில் வைத்து அவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டி ஒன்றில் கூரிய ஆயுதங்களுடன் வந்த மூவர், மேற்படி நபரின் தலையையும், இரண்டு கைகளையும், கால் ஒன்றையும் துண்டுதுண்டாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
அதாவது போதைப்பொருள் வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், கொலைச் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.