சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட 'யுக்திய' நடவடிக்கையின் போது பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்களான குடு ரொஷான், கவிது மதுரங்க மற்றும் ஹெட்டியாராச்சிகே ஸ்ரீயாய் ஆகியோரின் 100 மில்லியன் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் காணிகளை பொலிஸாரின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களில் . 33 மில்லியன் ரூபா பெறுமதிமிக்க சொகுசு ஜீப் ஒன்றும், ரூ. 13 மில்லியன் பெறுமதியான வேன் , ரூ. 14 மில்லியன் மதிப்புள்ள இரண்டு கார்கள் மற்றும் ரூ. 01 மில்லியன் பெறுமதியான முச்சக்கர வண்டி ஆகியவை உள்ளடங்குவதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த குறித்த கடத்தல்காரர்களுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் தலகல, மாலபே மற்றும் ஜா-எல ஆகிய இடங்களில் இருந்த 45 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள காணிகள் மற்றும் சொத்துக்களும் இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.