ரஜினிகாந்த் இன்று இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர். இவரின் ஜெய்லர் படம் தான் இந்த வருடம் தென்னிந்திய படங்களில் அதிகம் வசூல் செய்த படம். இந்த வயதிலும் ரஜினி நம்பர் 1 நாற்காலியை விட்டு நகராமல் அமர்ந்துள்ளார்.இந்நிலையில் ரஜினி இந்த இடத்தில் இருப்பது யாருக்கு கோபமோ விஜய் ரசிகர்களுக்கு செம கோபம் போல. தினமும் ரஜினி பற்றி ஒரு வீடியோவை வெட்டி ஒட்டி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தற்போது ரம்பா அவர்கள் நம் சினி உலகம் நேயர்களுகாக கொடுத்த பேட்டியில் ரஜினி சார் படபிடிப்பில் ஜாலியாக இருப்பார், எல்லோரிடமும் வம்பு இழுப்பார், அப்படி தான் ஒரு முறை இருட்டில் என் முதுகில் தட்டி என்னை அலற வைத்தார், பிறகு ஜாலியாக பேசி சிரித்தோம் என்று கூறியிருந்தார்.
ஆனால், விஜய் ரசிகர்கள் பலரும் அதை எதோ ரம்பாவிற்கு ரஜினி தொல்லை கொடுத்தது போல் சித்தரித்து ட்ரெண்ட் செய்தனர். இதை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கடுமையாக எதிர்த்ததோடு, விஜய்யுடைய கூலிப்படை அதாவது ஐடி விங் தான் ரஜினி மீதுள்ள வெறுப்பால் இப்படி செய்கின்றனர் என கூறியுள்ளார்.