விக்னேஷ் சிவன் திரும்புற இடமெல்லாம் கன்னி வெடி தான் என்று சொல்லும் அளவிற்கு அவரை கெட்ட நேரம் பிடித்து ஆட்டிப்படைக்குது. இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனைகள் என்று சொல்லும் அளவிற்கு தொடர்ந்து சிக்கலில் தவித்து வருகிறார். ஆரம்பத்தில் அஜித்துக்கு இயக்குனராக போகிறார் என்று இருந்த நிலைமையில் இருந்து பின் வாங்கினார். அடுத்து கமல் கூட்டணியில் இணைய போவதாக பல பேச்சுக்கள் அடிபட்டது.
அதிலையும் சம்பள பிரச்சனையில் விக்னேஷ் சிவன் கமல் கூட்டணி ஒத்திவைக்கப்பட்டது. பிறகு ஒரு வழியாக பிரதிப்பை வைத்து இயக்கலாம் என்று படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்று வைத்து அதன் சுருக்கமாக LIC என்று வெளியிட்டு பட பூஜையை போட்டார். ஆனால் போட்ட பிறகு இந்த டைட்டிலே நாங்கள் பல வருடங்களுக்கு முன்னதாகவே ரிஜிஸ்டர் பண்ணி அதை தொடர்ந்து ரினிவல் பண்ணி வருகிறோம் என்று இயக்குனர் ஒருவர் தடாலடியாக எதிர்ப்பை தெரிவித்தார்.பின்பு இதைக் கண்டு கொள்ளாத விக்னேஷ் சிவனுக்கு மறுபடியும் ஒரு பிரச்சனை பூகம்பமாக வெடித்தது. அதாவது எல்ஐசி காப்பீட்டு நிறுவனம் இந்த டைட்டிலை பயன்படுத்தக் கூடாது என்று விக்னேஷ் சிவன் மற்றும் படத்தின் தயாரிப்பாளராக இருக்கும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோவிற்கு நோட்டீசை அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதையும் கண்டுகொள்ளாமல் படக்குழு இந்த விஷயத்தை அலட்சியப்படுத்தி வருகிறார்கள். இப்படி ஆரம்பித்த படத்தின் டைட்டிலுக்கு ஒரு பக்கம் பிரச்சனை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.இதற்கிடையில் படத்தை பெரிய அளவில் ப்ரோமோஷன் பண்ணி விட வேண்டும் என்பதற்காக நயன்தாராவிற்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளிவந்தது. அதாவது பிரதீப்புக்கு நயன்தாரா அக்கா என்ற கேரக்டர் மிகவும் வலுவாக இருக்கப் போகிறது என்று கூறியிருந்தார்கள். இதனாலேயே நயன்தாராவின் ரசிகர்கள் மனதில் இப்படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
ஆனால் தற்போது இதெல்லாம் இல்லை என்று விக்னேஷ் சிவன் நயன்தாராவை கழட்டி விட்டார். ஏற்கனவே படப்பிடிப்பு இடியாப்ப சிக்கலில் சிக்கி தவித்து வருகிறது. தற்போது நயனும் இல்லை என்றால் இந்த படத்தின் படப்பிடிப்பு எந்த அளவிற்கு போகும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அத்துடன் பிரதீப்புக்கு அப்பாவாக இப்படத்தில் சீமான் நடிக்கப் போகிறார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் சமூக நலனுக்காக போர் கொடியை தூக்கும் பேச்சாளர் சீமான் அவர்கள் இப்படத்தில் விவசாய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே விக்னேஷ் சிவனுக்கு நாலா பக்கமும் நேரம் சரியில்லை, அப்படி இருக்கும் பொழுது இப்பொழுது அமைதிருக்கும் இந்த கூட்டணி வேற எந்த அளவிற்கு கை கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.