உகண்டாவில் சபாநாயகர்கள் மஹிந்த யாப்பா..!!

tubetamil
0 minute read
0

 பொதுநலவாய அமைப்பின் சபாநாயகர்களின் 27 ஆவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன உகண்டாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது அவர் உகண்டாவின் ஜனாதிபதி யோவேரி முசவேனி, பிரதமர் ரொபின் நபஞ்ஜ மற்றும் உகண்டா சபாநாயகர் அனிடா அனெத் அமங் ஆகியோரைச் சந்தித்துள்ளார்.

அத்துடன், சபாநாயகருக்கும் உகண்டாவின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஓரியம் ஹென்றி ஒய்கெலோ ஆகியோருக்கும் இடையிலும் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்புக்களில் இலங்கைக்கும் உகண்டாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top