பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டி பொலிஸ் உத்தியோகத்தரை தாக்க வந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைப் பெண் என கந்தர பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை தெவிநுவர பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று, தனது வாகனத்தின் பாதைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி குறித்த பெண் தான் பயணித்த வாகனத்தை நிறுத்தி பொலிஸ் உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, குறித்த சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தரின் மார்புப் பகுதியில் முழங்கையால் தாக்கியதால், குறித்த அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனையடுத்து, கந்தர பொலிஸார் சந்தேகநபரான பெண்ணைக் கைது செய்ததுடன், குறித்த ஜீப்பை பொலிஸ் காவலில் எடுத்துக்கொண்டனர்.