ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2024ஆம் ஆண்டு புத்தாண்டில் தனது கடமைகளை ஆரம்பித்து வைத்தன் பின்னர், இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அவரது ஊழியர்களைச் சந்தித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய வருட கடமைகளை ஆரம்பிக்கும் முகமாக, தேசிய கொடியை ஏற்றிவைத்த பின்னர், நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு 01 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் ஜனாதிபதி அலுவலக ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரச சேவை உறுதிமொழியை எழுத்துக்கொண்டனர்.
தனது ஊழியர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜனாதிபதி அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.