நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கும் (43) அவரது நீண்ட நாள் காதலரான க்லார்கே கேஃபோர்டுக்கும் (47) கடந்த 2019ம் ஆண்டில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
பின்னர், கொரோனா பரவல் காரணமாக திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்துக் கொள்ள இருந்தனர். ஆனால், கொரோனா தொற்று காரணமாக மீண்டும் திருமணம் தள்ளிப்போனது.
இவ்வாறுஇலுக்கையில், ஜெசிந்தா ஆர்டனுக்கும் க்லார்கே கேஃபோர்டுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்பேலாது ஆர்டெர்ன் ஒரு வெள்ளை நிற ஆடையும், கேஃபோர்ட் கருப்பு நிற உடையையும் அணிந்திருந்தார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணமக்கள் இருவருக்கும் உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.