160,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 31ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை நாட்டை வங்குரோத்து நிலையில் உள்ளதாக அரசாங்கம் ஒருபோதும் பிரகடனப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
அத்தோடு வங்குரோத்து நிலை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.