பெண்கள் நிர்வாணமாக சில நாட்கள் இருக்கும் கிராமங்கள் பற்றி கேள்வி பட்டிருக்கின்றோம் எனினும், ஆண்களும் நிர்வாணமாக இருக்கும் விசித்திரமான நிகழ்வு பெப்ரவரி 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
ஜப்பானில் 1675 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் ‛ஹட்கா மட்சூரி' எனும் ஆண்களின் நிர்வாண திருவிழாவில் பங்கேற்க பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் அந்த திருவிழா கொண்டாடப்படுவதன் பின்னணி குறித்த வினோத தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பாரம்பரியமாக சில திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த திருவிழாக்கள் வெறும் பொழுது போக்குகளுக்கு மட்டுமின்றி அந்த பகுதி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளமாக இருக்கிறது.அந்த வகையில் ஜப்பானில் ஆண்டுதோறும் வினோத திருவிழா ஒன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது அந்த திருவிழாவின் பெயர் ஆண்களுக்கான நிர்வாண திருவிழாவாம்.
ஜப்பானில் கொண்டாடப்படும் இந்த வினோத திருவிழாவின் உண்மையான பெயர் ‛ஹடகா மட்சூரி'. இதனை ஆண்களின் நிர்வாண திருவிழா எனவும் அழைக்கின்றனர். இந்த திருவிழாவில் ஆண்கள் சிறிய அளவிலான துணியை மட்டும் உடலில் அணிந்து இருப்பார்கள். ஜப்பானின் ஐச்சி மகாணத்தின் இனாசாவா நகரில் கொனோமியா வழிபாட்டு தலத்தில் நடந்து வருகிறது.
1675 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் தான் இந்த ஆண்டுக்கான ‛ஹடகா மட்சூரி' திருவிழா அடுத்த மாதம் (பெப்ரவரி) 22ம் திகதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் 10 ஆயிரம் ஆயிரம் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. இந்நிலையில் தான் தற்போதைய இந்த விழாவில் பெண்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டு 40 பெண்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்கும் பெண்கள் முழு உடை அணிந்து இருப்பார்கள். ஹேப்பி கோட் அணிந்து இருப்பார்கள். விழாவின் தொடக்கத்தில் நடக்கும் சடங்குகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். அதாவது ‛நோய்சாசா' என அழைக்கப்படும் சடங்கில் மட்டும் பங்கேற்பார்கள். அப்போது அவர்கள் மூங்கில் புல்லை துணியில் சுற்றி கோவிலுக்கு எடுத்து செல்லும் 'நஒயிசா' சடங்கில் மட்டுமே பங்கேற்பார்கள்.