விறகு விற்பனை மையமாகக் கொண்டு கசிப்பு விற்பனை பெண் ஒருவர் கைது..!!
January 22, 2024
0 minute read
0
யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலீஸ் அதியஸ்தகருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலீஸ்ஸாருடன் இணைந்து கோப்பாய் மத்திய கிருஷ்ணன் கோயில் பகுதியில் விறகு விற்பனையை மையமாகக் கொண்டு கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 10 லிட்டர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டவரை கோப்பாய் பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர்.சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை பொலீசார் முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Tags
Share to other apps