கொழும்பில் இருந்து பதுளை நோக்கிச் செல்லும் பொடிமெனிக்கே எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த ஈரானிய சுற்றுலாப் பயணி ஒருவர் பலத்த காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
29 வயதான சுற்றுலா பயணி எல்ல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
ரயிலில் ஹப்புத்தளை புகையிரத நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட காயமடைந்தவர் தியத்தலாவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் பெர்னாண்டோவின் பணிப்புரையின் பேரில் ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.