டெங்கு நோய் தாக்கம் அதிகரிப்பு பல்கலைக்கழக மாணவி மரணம்..!!

tubetamil
0

 டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, 23 வயது பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் பயிலும் மாணவி ஒருவரே நேற்று முன்தினம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் மாணவிக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் அவருக்கு டெங்கு நோய் தொற்று

ஏற்பட்டுள்ளமையை வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவி, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதேவேளை, கொத்துரொட்டியை உண்டு விட்டு உறங்கச் சென்ற பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்றும் ஹொரணை – வல்பிட்ட பகுதியில் பதிவாகியுள்ளது.33 வயது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். இப்பெண் சில காலமாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top