அமெரிக்காவின் அட்லாஸ் ஏர் போயிங் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று நடுவானில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
அத்தோடு அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 10:46 மணியளவில் புறப்பட்ட அட்லஸ் ஏர் விமானம் சிறிது நேரத்திலேயே தீப்பற்றி எரிந்துள்ளது.
மேலும் இந்த விமானம் பியூர்டோ ரிக்கோவில் உள்ள சென் ஜுவான் நகருக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
இவ்வாறுஇருக்கையில், விமானி உடனடியாக விமானத்தை மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கினார்.
விமானம் தரையிறங்கியதும் விமான நிலையத்தில் தயாராக இருந்த பாதுகாப்பு குழுவினர் தீயை அணைத்துள்ளனர்.