சிம்பு, எஸ்.டி.ஆர், லிட்டில் சூப்பர்ஸ்டார் என்றும் அறியப்படுகிறார் நடிகர் சிலம்பரசன். இவர் நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்திரன் மூத்த மகனாகும். குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா கெரியரை தொடங்கிய சிம்பு தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வருகிறார்.
நடிகர் சிம்பு குறித்த விமர்சனங்களும் கிசுகிசுகளும் எக்கச்சக்கமாக அவ்வப்போது வெடிக்கும். எனினும், எது வந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் இன்றளவிலும் குறையாமல் இருக்கிறது. இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகள் அதிலும் இளம் பெண் ரசிகைகள் தான் அதிகம். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பக்கூடிய நடிகராக இருக்கும் இவர் தற்போது அவரது 48வது படத்தின் வேளையில் படு பிஸியாக இருக்கிறார்.சமூக வலைத்தளம் மூலமாக பிரபலமானவர் நடிகை தேவயானி ஷர்மா. இவர் மாடலாகவும் பணியாற்றி வருகிறார். தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் நடித்துவரும் இவர் 2021ல் வெளியான ரொமான்டிக் படத்தின் மூலமாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு சைத்தான், சேவிங் தி டைகர்ஸ் ஆகிய படங்களிலும் நடிகை தேவயானி ஷர்மா நடித்திருக்கிறார்.தற்போது விளம்பர படங்களிலும், சினிமாக்களிலும் நடித்து வரும் தேவயானி சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பது, ஹிந்தி மற்றும் தெலுங்கில் படங்கள் செய்தாலும், தமிழில் படம் செய்யவேண்டும் என்பதுதான் அவரின் ஆசையாம்.சாதாரண நாயகியாக மட்டுமில்லாமல் தனது நடிப்பு திறனை முழுவதுமாக செயல்படுத்தி மக்கள் அனைவரும் விரும்பும் ஒரு நடிகையாக வலம் வரவேண்டும் என்பதுதான் அவரின் விருப்பமாம். அது மட்டுமில்லாமல் கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி போன்ற நடிகைகள்தான் தேவயானி ஷர்மாவிற்கு பிடித்தமான நடிகைகளாம். மேலும் கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவிதான் இவருக்கு முன்னுதாரணமாம்.தனது வாழ்க்கையில் லட்சியம் என்பது சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதுதான் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். இதற்காக முழு வீச்சில் இறங்கி இருப்பதாகவும் அதற்கான வேலைகளை தொடங்கியிருப்பதாகவும் தேவயானி கூறியிருக்கிறார். மேலும் மக்கள் அவர் செய்யும் படங்களை அங்கீகரித்து அவரை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதுதான் அவரது லட்சியம் எனவும் நடிகை தேவயானி அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
தற்போது தேவயானியின் வாழ்நாள் லட்சியமே சிம்புவுடன் ஜோடியாக நடிப்பதுதான் என்னும் இந்த விஷயம் சிம்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விஷயம் சிம்புவின் காதுக்கு சென்று, இவருடன் ஒரு படம் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.