மீரிகம - பஸ்யால வீதியின் துமுன்னேகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.
இதில், அம்பேபுஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த வரகாபொல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 52 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்.
அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி பாரவூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான பெண் பொலிஸ் அதிகாரி வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.