மரக்கறிகளின் விலையை குறைப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமது கட்சிக்கு எதிராக இட்டுக்கட்டப்பட்ட பொய்களுக்கு விரைவில் தகுந்த பதிலளிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்,
சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக இட்டுக்கட்டப்பட்ட பொய்களுக்குப் பதிலளிக்கும் வகையில் இம்மாத இறுதியில் இருந்து கிராமங்களை உள்ளடக்கி சுமார் 2500 தொடக்கம் 3000 வரையான கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்தப் பொய்யான விளம்பரங்களுக்கு முன்னரே பதிலளிக்காமல் இருப்பது தவறு என்றும் இதன்போது நாமல் சுட்டிக்காட்டி உள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காலத்தில் கரிம உரங்களை அறிமுகப்படுத்தியதை விட மரக்கறிகளின் விலை தற்போது அதிகரித்துள்ளதால், மரக்கறிகளின் விலையை குறைப்பதற்கு குறிப்பிட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் இதுவரையான செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் குறித்து கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.