விலைமதிப்பற்ற வலம்புரிச் சங்கு ஒன்றை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மட்டக்களப்பின் வாகரைப் பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
மேலும் வாகனம் ஒன்றில் சந்தேக நபர்கள் வலம்புரிச் சங்கு ஒன்றை எடுத்துக் கொண்டு விற்பனை செய்வதற்காக முயற்சிக்கும் தகவல் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்துள்ளது.
இதனையடுத்து வாகரைப் பிரதேசத்தில் விசேட சோதனையொன்றை மேற்கொண்டு விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
இச் சந்தேக நபர்கள் வாகரைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளதோடு, வலம்புரிச் சங்கு விசேட அதிரடிப்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.