திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில்..!!

tubetamil
0

 திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.



நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 9ஆம் திகதி முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

கடந்த டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நாடாளுமன்ற விவகாரக் குழு இதனை தீர்மானித்திருந்தது.

அதன்படி, எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 09.30 மணி முதல் 10.30 வரை வாய்வழி வினாவுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்போது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கச் சட்டமூலத்திற்கான அலுவலகம் ஸ்தாபிக்கும் திருத்தச்சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, தேசிய நீரியல் திருத்தச்சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top