யாழ் நகர் சுதந்திர நடைபவனிக்கு யாழ். சிவில் சமூக நிலையம் அழைப்பு..!!

tubetamil
0

 சுதந்திர தினத்தன்று ஐந்தாவது தடவையாக யாழ் நகரில் நடைபெறவுள்ள “சுதந்திர நடைபவனியில்” பங்கேற்க யாழ் சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த்.  

அழைப்பு விடுத்துள்ளார்.  யாழ்.சிவில் சமூக நிலையம் இதை ஏற்பாடு செய்துள்ளது.

2024 ஆம் ஆண்டு முக்கிய தேர்தல் ஆண்டாக கருதப்படுகிறது.

தாய்நாடு பொருளாதார ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், மத ரீதியாகவும் எதிர்பாராத ஒரு துரதிஷ்டமான நிலையை அடைந்துள்ளது.   எங்களைப் போலவே நீங்களும் இதை,நன்கு புரிந்துள்ளீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்த சவாலான நேரத்தில் நாம் எடுக்கும் முடிவுகளும் செயல்களும் தாய்நாட்டின் எதிர்காலத்தை நேரடியாக பாதிக்கும்.

நாம், தொடர்ச்சியாகச் சுட்டிக் காட்டியபடி,  நாட்டில் பிரிவினைவாதத்தை நோக்கித் தள்ளும் கட்சிகளின் குறுகிய நோக்கங்களும்,    உள்நாட்டு நெருக்கடிகளுக்கு ஊடாக வாழ்வாதாரமாக வாழும் தரப்பினரின் குறுகிய நோக்கங்கங்களை தோல்வி அடையச் செய்யும் ஆண்டாக (2024)  அமையும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள இதை சந்தர்ப்பமாக கொள்வோம்.


கடந்த சில வருடங்களாக யாழ். சிவில் சமூக நிலையம் மற்றும் அதனைச் சார்ந்த அமைப்புகளினால் பல பாரிய வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போதும் கூட கடும் சிரமங்களுக்கு மத்தியில் அவை மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top