மண் ஏற்றி வந்த டிப்பருடன் கார் மோதி விபத்து..!!

tubetamil
0

 புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் டிப்பர் வாகனத்துடன் கார் மோதி விபத்திற்குள்ளான சம்பவவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.


குறித்த விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

ஒட்டுசுட்டான் வீதியில் இருந்து புதுக்குடியிருப்பு பகுதி நோக்கி மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் பயணித்த வேளை அதே பகுதியில் இருந்து வந்த கார் ஒன்று டிப்பர் வாகனத்தை தவறான முறையில் முந்தி செல்ல முற்பட்ட வேளையிலேயே புதுக்குடியிருப்பு சந்தி பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது. .

இன்று (10.01.2024) மாலை 4 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் கார் சேதம் அடைந்துள்ளதுடன், விபத்திற்குள்ளான இரு வாகனங்களும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனினும் எந்தவித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த விபத்திற்குள்ளான டிப்பர் வாகனம் புதுக்குடியிருப்பு பிரேதேச செயலக பிரிவிற்குற்பட்ட மன்னாகண்டல் பகுதியில் அனுமதி இல்லாமல் வைத்திருந்த மணலை புதுக்குடியிருப்பு பொலிஸார் ஏற்றி வந்த போதே குறித்த விபத்து ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top