பிரித்தானியாவின் இளவரசி ஆனி இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை புதன்கிழமை (10) பிற்பகல் வந்தடைந்தார்.
மணியளவில் இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான யுல்-504 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை பிற்பகல் 1.06க்கு வந்தடைந்தார்.
அவருடன் அவரது மருமகன் இளவரசர் வல்லப உட்பட 07 பேர் கொண்ட தூதுக்குழுவும் வந்திருந்தது.
அவர்களை, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சீதா அரம்பேபொல இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் குழு வரவேற்றது.
நீர்கொழும்பு ஹரிச்சந்திர நியூஸ்டெட் பெண்கள், விஜயரத்தினம் மற்றும் அல் ஹிலால் தேசிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களின் சிறு குழு மற்றும் பல்வேறு மலையகம் மற்றும் கீழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நடனக் கலைஞர்கள் வரவேற்க நடனங்களை ஆடி வரவேற்றனர்.
விமானத்திலிருந்து இறங்கிய பிறகுஇ இளவரசி, சிவப்பு கம்பளத்தின் நடந்துவந்து விமான நிலையத்தின் தங்க நினைவு குறிப்பேட்டில் வருகையின் நினைவை பதிவிட்டார்.
இளவரசி (தங்க புத்தகத்தில்) ஒரு குறிப்பை வைத்துவிட்டு விமான நிலையத்தில் உள்ள சிறப்பு விருந்தினர் அறைக்கு சென்றாள்.
அங்கு இடம்பெற்ற தேனீர் வைபவத்தின் பின்னர், விசேட வாகன அணிவகுப்பில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையையும் அவதானித்தார்.
இத்தொழிற்சாலையில் சுமார் ஒரு மணித்தியாலம் அவதானித்த பின்னர் கொழும்புக்கு பயணித்தார்.