தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பில் உள்ள இந்தியன் இல்லத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது இலங்கையின் சமகால அரசியல் நிலவரங்கள் குறித்தும், பொருளாதார நெருக்கடி தொடர்பாகவும், தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.