இலங்கையில் அண்மைக்காலமாக தொழுநோய் தாக்கம் அதிகரித்து வருவதாக தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டாக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
இதனை முன்னிட்டு தொடருந்து மற்றும் பேருந்து நிலையங்களில் 'தொழுநோய்' குறித்த விழிப்புணர்வு இன்று(31.01.2024) நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஜனவரி மாதம் முதல் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 1256 தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதிக எண்ணிக்கையான தொழுநோயாளிகள் கொழும்பில் பதிவாகியுள்ளனர், அதில் 256 பேர் உள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 138 நோயாளர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் 130 நோயாளர்கள் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 92 நோயாளர்கள் என பல மாவட்டங்களில் இருந்து தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு கண்டறியப்பட்ட நோயாளிகளில் 14 வயதுக்குட்பட்ட 131 சிறுவர் தொழுநோயாளிகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அதன் பிரகாரம் மேல் மாகாணத்திலுள்ள தொடருந்து மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கு தொழுநோய் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் 40,000 துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் வேலைத்திட்டம் நாளை (31) காலை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்தோடு கொழும்பு, கம்பஹா, களுத்துறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், கொழும்பு மாநகர மாநகரசபை மற்றும் ஹேமாஸ் மருத்துவமனை என்பன இச்செயற்பாட்டை கூட்டிணைந்து முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.