பாம்புக்கொடி கோபுரத்தில் பறக்குது அழகோவியமாக காட்சியளிக்கும்..!!

tubetamil
0

 பாம்புக்கொடி கோபுரத்தில் பறக்குது படகில் வரும் பக்தர்களை அழைக்குது புதிதாக வர்ணம் தீட்டப்பட்டு அழகோவி யமாக காட்சியளிக்கும் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய 108 அடி இராஜ கோபுரமாக காணப்படுகின்றது அதன் நிறைவு இன்று காட்சியளிக்கின்றது


புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வரண பந்தன உத்த மோத்தம த்ரயத்திரும்சமத் குண்டபக்ஷ மஹாயாக பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் எதிர்வரும் 24.01.2024  அன்று காலை 09.38 முதல் 11.20 மணிமுதல் 33 குண்ட பக்ஷ மஹாயாக பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் நிகழவுள்ளது..

21.01.2024 அன்று நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மனுக்கு உரிய தூபதீபம்,யந்திர ஸ்தாபனங்கள், பரிவார மூர்த்திகள்,பிரம்ஸ்தாபனம்,அர்த்தபந்தண சாத்தல் இடம்பெற்று மறுநாள் 22.01.2024 அன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட எண்ணைக்காப்புசாத்தும் நிகழ்வு மறுநாள் 23.01.2024 மாலை 05.00 வரை இடம் பெற்று இனிதே நிறைவடையும்..

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வரண பந்தன உத்தமோத்தம த்ரயத் திரும்சமத் குண்டபக்ஷ மஹாயாக பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேச கிரியைகளை சிவஸ்ரீ ப.மு.பால குமாரகுருக்கள் தலைமையிலான 27 சிவாச்சாரியர்கள் கலந்துகொண்டு கிரியைகளை 
நடாத்திவைப்பதற்காக கலந்துகொள்ளுகின்றனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top