பிக் பாஸ் 7ம் சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. போட்டியாளர்கள் 6 பேர் தற்போது வீட்டில் இருக்கிறார்கள்.
அத்தோடு அவர்களில் யார் டைட்டில் ஜெயிப்பார்கள் என்பது வாக்குகள் அடிப்படையில் தான் உறுதியாகும். அர்ச்சனாவுக்கு தான் ஆதரவு அதிகம் இருக்கிறது என்பதால், அவருக்கு தான் டைட்டில் கிடைக்கும் என ஒரு கருத்து நிலவுகிறது.
எனினும் தற்போது 6 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கும் நிலையில், பைனலில் வெறும் 4 பேர் தான் வருவார்களாம். இரண்டு பேரை வாரத்தின் இடையிலேயே எலிமினேட் செய்ய இருக்கின்றனர்.
இன்று விஜய் வர்மா பிக் பாஸ் மிட் வீக் எலிமினேஷனில் வெளியேறி இருக்கிறார் என உறுதியான தகவல் வந்திருக்கிறது.