இலங்கைக்கு அருகே இந்து சமுத்திரத்தின் தென்மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இன்று (21.01.2024) அதிகாலை குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் கடற்படுகையின் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு, நிலநடுக்கத்தின் அதிர்வு ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அனர்த்தம் ஏற்படுவதற்கான ஆபத்துகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரேசில் நாட்டின் மேற்கு பகுதியிலும் 6.4 ரிக்டர் அளவில் நேற்றைய தினம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.