நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி சீனாவுடன் முழு அளவிலான இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பசுபிக் பிராந்திய நாடான நவுரு தீவு தீர்மானித்துள்ளது.
நவுருவின் முடிவைப் பாராட்டுவதாகவும் வரவேற்பதாகவும் சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தாய்வானின் பிரதி வெளிவிவகார அமைச்சர் தியன் சங்க் வெங்க் அவசரமாக செய்தியாளர் மாநாடொன்றைக் கூட்டி, “நவுரு எம்முடன் இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்வது தொடர்பான செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது. தாய்வான் எந்த அழுத்தத்திற்கும் அடிபணியப் போவதில்லை. எதைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ அதை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்” என்றுள்ளார்.
தாய்வானியர்கள் உலகிற்குச் செல்வதற்கான விருப்பத்தை உறுதிப்படுத்தும் அதே வேளையில் சீனா அதற்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாக தாய்வான் குற்றம் சாட்டிய சூழலில் இந்த முடிவை நவுரு எடுத்துள்ளது.