அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்ட்ரோபோடிக் என்ற தனியார் நிறுவனம் நிலவு குறித்து ஆய்வு செய்யக் கடந்த 8-ந் தேதி வல்கன் ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை அனுப்பியது. ராக்கெட்டில் இருந்து பிரிந்த சிறிது நேரத்திலேயே, செயற்கைக்கோளில் சிறு வெடிப்பு ஏற்பட்டது.
அதில் கணிசமான பாகங்களை இழந்தது. இதனால் பெரெக்ரைன் லேண்டர் நிலவில் முறையாகத் தரையிறங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஆனாலும் நிலவை நோக்கிச் செல்லும் போதே, அது வழக்கமான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது.
இவ்வாறுஇருக்கையில் ஆஸ்ட்ரோபோடிக் நிறுவனம் தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் கூறும்போது, விண்கலம் தற்போது பூமியை நோக்கி வருகிறது. ஆனால், விண்கலத்தால் பூமியில் தரையிறங்க முடியாது.
எனினும் அதற்கு முன்பாக அது வளிமண்டலத்தில் எரிந்துவிடும். தற்போது எங்களுக்கு இருக்கும் மற்ற நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.