பாராளுமன்ற தேர்தல் இந்த ஆண்டு நடைபெறும் நிலையில், சொந்த ஊர் மற்றும் தொடர்ந்து 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள டிஜிபி சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
உதவி ஆய்வாளர் முதல் ஏடிஜிபி வரை உள்ள அதிகாரிகளின் பட்டியலை தயாரித்து தலைமை அலுவலகத்திற்கு வரும் பத்தாம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என உத்தரவு.
மேலும் தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது.
நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள அதிகாரிகளையும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது.
அத்தோடு ஓய்வு பெற்று பணி நீட்டிப்பு பெற்ற காவல்துறை அதிகாரிகளையும் பயன்படுத்தக் கூடாது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.