எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும்
பருவச் சீட்டுகள் விடுமுறை நாட்களிலும் செல்லுபடியாகும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
புத்தாண்டில் ஜனவரி மாதத்திற்கான பருவச் சீட்டுக்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணம் செய்ய முடியாத வகையில் வழங்கப்பட்டன.
எனினும் இந்த விடயம் தொடர்பில் எமது செய்திச் சேவை இலங்கை போக்குவரத்து சபையின் தலைவரிடம் வினவியது.
அதற்கு பதிலளித்த அவர் விடுமுறை நாட்களிலும் பாடசாலை மாணவர்களுக்கான பருவச் சீட்டுக்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்கப்படும் என தெரிவித்தார்.