ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லால் சலாம்'. கடந்த பொங்கலுக்கு இப்படத்தினை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அன்றைய தேதியில் படம் வெளியிட முடியாமல் போனை தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் 'லால் சலாம்' வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ லான்ச் நேற்றைய தினம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா '3' படம் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆனார். இதனையடுத்து 'வை ராஜா வை' படத்தினை இயக்கினார். இப்படங்களுக்கு பிறகு டைரக்ஷனுக்கு கேப் விட்டு விட்டார். நீண்ட காலமாக படங்கள் எதுவும் இயக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் டைரக்ஷன் பக்கம் திரும்பியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'லால் சலாம்' படத்தினை இயக்கியுள்ளது.விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ளது 'லால் சலாம்' படம். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இதனால் இந்த கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள 'லால் சலாம்' படத்தின் இசை வெளியீட்டு சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா, ஏ.ஆர். ரஹ்மான், விஷ்ணு விஷால், விக்ராந்த், லைகா சுபாஸ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.இவ்விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், எனக்கு அப்பா படம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்காக மட்டும் இந்தப்படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டது இல்லை. படம் சொல்ல வருகிற மெசேஜ், தத்துவம் ஆகியவற்றுக்காக ஒப்புக்கொண்டார். 'லால் சலாம்' படத்தின் அப்டேட்கள் வெளியாகும் போதெல்லாம், விடாமுயற்சி அப்டேட் போடுங்கள். வேட்டையன் அப்டேட் வேணும் என கமெண்ட்கள் வரும்.
இதையெல்லாம் பார்க்கும் போது நம்ம படம் லிஸ்ட்லயே இல்லையே என்ற எண்ணம் தோன்றியது. படத்தின் பைனல் அவுட்பிட்டை பார்த்ததும் சொல்கிறேன். என்னுடைய படம் எல்லாருடைய லிஸ்ட்லயும் இருக்கும் என தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 'லால் சலாம்' படத்தினை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அஜித்தின் 'விடாமுயற்சி', ரஜினியின் 'வேட்டையன்' படத்தினையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.