நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள்(IMF) குழு மற்றும் இலங்கை அதிகாரிகள் இடையிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இன்று(16) ஆரம்பமாகவுள்ளது.
6 பேர் அடங்கிய IMF பிரதிநிதிகள் குழு, மின்சார சபை, மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையிலான வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்கள் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து, பொருளாதார மறுசீரமைப்பை மேற்கொண்டு இலங்கை குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் அடைந்துள்ளமை தொடர்பில் தமது பாராட்டுகளை தெரிவித்திருந்தனர்.
இக்குழுவினர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.