இத்தாலியை சேர்ந்த பார்பரா ஐயோலே என்ற 50 வயதான பெண் ஒருவர் கடந்த 24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்ப நாடகமாடியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்த தகவல், இணையத்தில் பேசு பொருளாகி வருகிறது.
பார்பரா மாநில அரசு வழங்கிய மகப்பேறு உதவித்தொகைகளை பெறுவதற்காகவும், வேலையில் இருந்து ஓய்வு பெறுவதற்காகவும் இதுபோன்று நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும் இதற்காக அவர் போலி மருத்துவ ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். அவர் 12 முறை கருச்சிதைவு அடைந்ததாகவும், பிரசவத்தின் மூலம் 5 குழந்தைகள் இருப்பதாகவும் ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அத்தோடு அவரது இந்த மோசடிக்கு கூட்டாளி ஒருவரும் உதவி செய்துள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.