தோண்ட தோண்ட உடல்கள்191 குழந்தைகளை படுகொலை செய்த பாதிரியார்..!!

tubetamil
0

 கென்யாவில் 191 குழந்தைகள் கொடூர படுகொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கிறிஸ்தவ பாதிரியார் பால் மெக்கன்சி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மலிண்டி என்ற கடலோர நகரம் அமைந்து உள்ளது. இந்த பகுதியில், நற்செய்தி (குட் நியூஸ்) சர்வதேச கிறிஸ்தவ ஆலயத்தின் பாதிரியாரான பால் மெக்கன்சி என்பவரை சிலர் கும்பலாக பின்பற்றி வந்து உள்ளனர்.அவர்களிடம் சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்றால் பட்டினி இருக்க வேண்டும் என கூறியுள்ளார். பாதிரியாரின் கூற்றை உண்மை என நம்பி பட்டினி இருந்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழலில், ஆலயம் அமைந்த இடத்தில், ஷகாகோலா வன பகுதியில் சிலரது உடல்கள் புதைந்து கிடப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து பொலிஸார் அங்கு விரைந்து சென்றுள்ளனர்.குறிப்பிட்ட இடத்தில் இருந்து தோண்ட, தோண்ட உடல்கள் கிடைத்தபடி இருந்தது போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. 90-க்கும் மேற்பட்ட உடல்கள் கிடைத்தன. அவர்களில் 15 பேரை போலீசார் மீட்டு, காப்பாற்றினர்.



அவர்களில், 4 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது உயிரிழந்து விட்டனர். இதுபற்றிய தொடர் விசாரணையில் பால் மெக்கன்சியை போலீசார் கைது செய்த நிலையில் , போலீசாரின் காவலில் இருந்தபோது கூட சாப்பிடவோ அல்லது குடிக்கவோ, மெக்கன்சி மறுத்தது ஆச்சரியம் ஏற்படுத்தியது. கடந்த ஏப்ரலில் இருந்து அவர் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.இதனை தொடர்ந்து 800 ஏக்கர் வன பகுதி முழுவதும் சீல் வைத்து மூடப்பட்டது. தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில், பால் மெக்கன்சிக்கு எதிராக மலிண்டி ஐகோர்ட்டில் வழக்கு இடம்பெற்றுவரும் நிலையில், இதில் மெக்கன்சி மற்றும் சந்தேகத்திற்குரிய 29 நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

எனினும், அவர்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தனர். எனினும், மெக்கன்சிக்கு எதிராக பயங்கரவாதம், மனித படுகொலை மற்றும் குழந்தைகளுக்கு கொடூரம் இழைத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதாக . இந்நிலையில் பாதிரியாருக்கு எதிரான விசாரணை வருகிற மார்ச் 7-ந் திகதி தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.  

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top