இளநீர் ஒன்றின் விலை ரூ. 2000 ஆக விற்பனை..!!

tubetamil
0

 ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, முருதவெல ரலுவ கிராமத்திற்கு அருகாமையில் இரண்டாவது இளநீர் செய்கை கிராமம் நிறுவப்பட்டுள்ளது.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நேற்று (25) இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றது.


ஏற்றுமதிக்கு இளநீர் பயிரிடும் முதல் கிராமம் கடந்த ஆண்டு  முருதவெலியில் ஆரம்பிக்கப்பட்டதுடன் இவ்விரு கிராமங்களிலும் 10,000 இளநீர் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையின் இளநீருக்கு அதிக கேள்வி காணப்படுவதாகவும், மேலும் பல நாடுகளில் இருந்து எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இளநீருக்கு அதிக கேள்வி இருப்பதாகவும் விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

வாரத்திற்கு சுமார் 252,000 இளநீர்கள் நாட்டிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

2022 ஆம் ஆண்டில் இளநீர் ஏற்றுமதி மூலம் 2 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன், கடந்த வருடம் (2023) எதிர்பார்த்த வருமானம் 6 பில்லியன் ரூபாவாகும்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இளநீர் ஒன்றின் விலை இலங்கை ரூபாவின் பெறுமதிக்கு அமைய ரூ. 2000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இளநீர் இலங்கையின் பூர்வீகப் பயிராகும், பல நாடுகள் இளநீர் பயிரிட முயன்றாலும், இலங்கையில் இளநீர் போன்று அதிக சுவை இல்லாததால் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

இதன் காரணமாக, உள்நாட்டு இளநீருக்கு உலக சந்தையில் இலங்கையின் ஏகபோக உரிமை இன்னும் உள்ளது.

இந்த சூழ்நிலையில் இருந்து அதிகபட்ச இளநீரை அறுவடை செய்வதற்காக, குறிப்பாக முருதவெல பிரதேசத்தில் உள்ள பல கிராமங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, ரலுவ கிராமம் இரண்டாவது இளநீர் செய்கை மாதிரி கிராமமாக நிறுவப்பட்டுள்ளதுடன் அங்குள்ள விவசாயிகளுக்கு 1,600 இளநீர் கன்றுகளை விவசாய அமைச்சர் நேற்று வழங்கி வைத்தார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top