மாலியில் பஸ் வண்டி ஒன்று பாலத்தில் இருந்து விழுந்து 31 பேர் பலியாகியுள்ளனர்.
அண்டை நாடான புர்கினா பாசோவில் இருந்து மாலி நகரான கனிபாவை நோக்கி பயணித்த இந்த பஸ் பகோ நதியை கடக்கும் பாலத்தில் இருந்து விழுந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற விபத்தில் மேலும் பத்துப் பேர் காயமடைந்துள்ளனர்.
வாகனத்தை ஓட்டுநரால் கட்டுப்படுத்த முடியாமல் போயிருப்பதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
மோசமான நிலையில் உள்ள பல வீதிகள் மற்றும் வாகனங்கள், அதேபோன்று பொது போக்குவரத்துகளில் அதிக அளவான பயணிகள் ஏற்றப்படுவதன் காரணமாக மாலியில் வீதி விபத்துகள் வழக்கமான ஒன்றாக உள்ளது.