மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போதைய மின் கட்டணத்தில் ஆகக் குறைந்தது 33 சத வீதம் குறைக்கப்பட வேண்டுமென பொருளாதார நெருக்கடி பாதிப்பை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழு பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேற்படி குழு அண்மையில் பாராளுமன்ற கட்டடத்தில் கூடி கலந்துரையாடிய பின்னரே, இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, மின் கட்டண அதிகரிப்பு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 10 இலட்சத்துக்கும் அதிகமான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அக்குழுவில் ஆராயப்பட்டுள்ளது.
அந்த வகையில் மின் கட்டண நிலுவைத் தொகையை தவணை முறையில் நுகர்வோரிடமிருந்து அறவிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் அக்குழு பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு பரிந்துரைகளை முன் வைத்துள்ளது.