இலங்கையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி தமிழ்நாடு மீனவர்கள் போராட்டம், வடமராட்சி கிழக்கில் இன்றும் 40 மேற்பட்ட இந்திய இழுவை படகுகள்...மீனவர்கள் குற்றச்சாட்டு.
எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில். இலங்கையில் கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உட்பட்டிருக்கின்ற மீனவர்களை விடுவிக்குமாறு கோரி இந்தியா தமிழ்நாடு மீனவர்கள் கால வரையறை அற்ற போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் நேற்றும், இன்றும். 40க்கும் மேற்பட்ட இந்திய இழுவை மடி படகுகள் கடற்கரையிலிருந்து சுமார் 2km தூரம் வரை வந்து செல்வதாக வடமராட்சிக் கிழக்கு வெற்றிலை கேணி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை நேற்று முன்தினம் தமக்கு சுமார் 30 இலட்சத்திற்க்கு மேற்பட்ட பெறுமதியான வலைகளை இந்தியன் இழுவை படகுகள் நாசம் செய்துள்ளதாகவும்,
இலங்கையில் தண்டனை அனுபவித்துவரும் இந்திய மீனவர்களை விடுவிக்கும்வரை கால வரையறை அற்ற போராட்டம் ஒன்றை மேற்கொண்டு கடல் தொழிலிற்க்கு செல்லாதும், நேற்றும், இன்றும் இடம் பெறும் கச்சதீவில் அந்தோனியார் ஆலயத்தில் திருவிழாவிற்க்கும் செல்லாது தொழில் பகிஷ்கரிப்பு மேற்கொண்டிருக்கும் நிலையில் நேற்றும், இன்றும் 40க்கும் மேற்பட்ட இந்திய இழுவமடி படகுகள் கடலில். கரையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படுவதாகவும். இதனால் தாம் தமது வலைகளை காப்பாற்றிக் கொள்வதற்காக கரை திரும்பியுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை நேற்று முன்தினம் நால்வரது 30 லட்சத்துக்கு மேற்பட்ட வலைகள் இந்திய இழுவை மடிப்படகுகளால் நாசம் செய்யப்பட்டுள்ளதாகவும். தெரிவித்த மீனவர்கள். இது விடயமாக கடற்றொழில் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். மற்றும் பிரதேச செயலகம் உட்பட பல இடங்களிலும் இழப்பீடு பெற்று தருமாறு கோரி கடிதம் வழங்கியதாகவும் ஆனால் அனைவரும் இழப்பீடு பெற்று தருவதாக கூறியும் இதுவரை எந்தவிதமான இழப்பீடுகளையும் பெற்று தரவில்லை என்று. வெற்றிலைகேணி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதற்கு பின்னர் தமக்கு பல லட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் இந்திய ரோலர்களால் அழிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள மீனவர்கள். தாம் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு பெரிதும் சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.