பெற்ற குழந்தைகளையே துன்புறுத்திய யூடியூபருக்கு 60-வருட சிறை..!

keerthi
0

 


மேற்கு அமெரிக்காவில் உள்ள மாநிலம், உடா(Utah). இதன் தலைநகரம் சால்ட் லேக் சிட்டி (Salt Lake City).

உடா மாநிலத்தில், 42 வயதான ரூபி ஃப்ராங்கி(Ruby Franke) எனும் பெண், தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

கடந்த 2015ல் ரூபி, யூடியூப் வலைதளத்தில் குழந்தைகளை வளர்ப்பது தொடர்பான வீடியோக்களை உருவாக்கி பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோ உருவாக்கத்தில் அவரது குழந்தைகளையும் அவர் பங்கெடுக்க செய்தார்.

"8 பாசஞ்சர்ஸ்" (8 Passengers) எனும் அவரது யூடியூப் சேனலுக்கு குறுகிய காலத்திலேயே 2 மில்லியன் பயனர்கள் சேர்ந்தனர்.

2020 காலகட்டத்தில் அவரது மகன்களில் ஒருவர் தனக்கு நேரும் துன்புறுத்தலை குறித்து ஒரு வீடியோ பதிவு செய்திருப்பதை ஒரு பயனர் கண்டு, ரூபியின் முந்தைய வீடியோக்களை கவனமாக ஆய்வு செய்தார். அதில் ரூபி தனது குழந்தைகளை "கட்டுப்பாடு" எனும் பெயரில் துன்புறுத்தும் சான்று கிடைத்தது.

இதனை தொடர்ந்து ரூபியை விசாரிக்க உடா மாநில குழந்தைகள் நல அதிகாரிகளிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன.

குற்றச்சாட்டுகளை மறுத்த ரூபி, 2022ல் தனது யூடியூப் சேனலை நிறுத்தி விட்டார். ரூபியும், அவரது கணவரும் பிரிந்தனர். 

தொடர்ந்து "ஜோடி ஹில்டெப்ராண்ட்" என்பவரின் "கனெக்ஷன்ஸ் க்ளாஸ்ரூம்" (ConneXions Classroom) எனும் சேனலில் ரூபி தனது வீடியோக்களை பதிவேற்றினார்.

2022ல் அவரது 12-வயது மகன் ஒருவன் வீட்டை விட்டு தப்பி, அண்டை வீட்டாரிடம் உணவு கேட்கும் போது அவன் உடலெங்கும், பல காயங்கள் இருப்பதும், அவை அச்சிறுவனை பலமாக கயிற்றினால் கட்டி வைத்ததால் ஏற்பட்டவை என்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவர்களும், காவல்துறையினரும் விரைந்து வந்து ரூபியின் வீட்டை ஆய்வு செய்தனர்.

அங்கு அவர்களுக்கு ரூபி தனது குழந்தைகளுக்கு உணவு, குடிநீர் வழங்காமல் சித்திரவதை செய்ததற்கான தடயங்கள் காவல் அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனை தொடர்ந்து விசாரணை நடைபெற்று, ரூபி ஃப்ராங்கி மற்றும் அவரது தொழில் கூட்டாளி ஹில்டெப்ராண்ட்" (54) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

விசாரணையின் போது நீதிமன்றத்தில் உடா மாநில அரசு தரப்பு வழக்கறிஞர், "ஃப்ராங்கியின் குழந்தைகள் நாஜி படையினர் நடத்திய சித்திரவதை கூடங்களை போன்ற சூழலில் வீட்டில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு உணவு, குடிநீர், படுக்கை, பொழுதுபோக்கு என அனைத்தும் மறுக்கப்பட்டு வந்தது" என தெரிவித்தார்.

இவ்வாறுஇருக்கையில், அவர்கள் இருவருக்கும் தலா 60 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.




Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top