இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதன்படி,
ஒக்டேன் 92 ரக பெற்றோல் விலை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலை 8 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 456 ரூபாவாகும்.
மேலும், ஒட்டோ டீசல் 5 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 363 ரூபாவாகும்.
மேலும் சுப்பர் டீசல் 7 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 468 ரூபாவாகும்.
இதேவேளை, மண்ணெண்ணெய் விலையும் 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 262 ரூபாவாகும்.இதேவேளை, சிபெட்கோவின் புதிய விலைக்கு ஏற்ப எரிபொருட்களின் விலையை அதிகரிக்கலங்கா ஐஓசி நிறுவனமும் தீர்மானித்துள்ளது.