சட்ட விரோதமான முறையில் உள்ளூர் துப்பாக்கிகளை (இடியன்) மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு இடியன் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், மிருக வேட்டைக்கு பயன்படுத்தப்படும் கட்டுத் துவக்குக் குழாய்கள் 03, கட்டுத் துவக்குக்கு பயன்படுத்தப்படும் கம்பி, ஈயக்குண்டுகள் 12, யானை வெடிமருந்து 3 ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக 14.02.2024 நேற்றைய தினம்
சுற்றிவளைப்பு மேற்கொண்ட போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.