யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுவில், சந்திரபுரம் பிரதேசத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (30) மிதிவெடியொன்றை பொலிஸார் மீட்டனர்.
மேற்படி பிரதேசத்திலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து இந்த மிதிவெடி அடையாளம் காணப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸாருக்கு காணி உரிமையாளர் தகவல் வழங்கினார். இதனைத் தொடர்ந்து அம்மிதிவெடியை அகற்றுவதற்கான நடவடிக்கையை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.