கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது.
இதற்கான சகல ஏற்பாடுகளும் பூ
ர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம் நேற்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இதேவேளை, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்காத நிலையில் இந்திய யாத்திரிகர்கள் எவரும் கச்சதீவு திருவிழாவில் பங்கேற்கமாட்டார்கள் என்று இராமேஸ்வரம் - வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு நேற்றுமுன்தினம் எழுத்தில் அறிவித்திருந்தார்.