முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் தலைமையில் விசேட கலந்துரையாடல்..!!

tubetamil
0

 கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர்  டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் (28) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு  விஜயம் மேற்கொண்டார்.


இன்று காலை மீனவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய புலிபாய்ந்தகல் மற்றும் செம்மலை கிழக்கு நாயாறு பகுதிகளுக்கு சென்று மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் பார்வையிட்டார்

தொடர்ந்து காலை 11.00 மணி தொடக்கம்  முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்டத்தில் உள்ள  சிறுதொழில் மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்

தொடர்ந்து தண்ணிமுறிப்பு முத்துஐயன்கட்டு பகுதி  நன்னீர் மீன்பிடியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடினார்

இதனை தொடர்ந்து திருமுறுகண்டி ஆலய  அபிவிருத்தி தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றது

இதில் குறிப்பாக  சிறுதொழில் மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் பிரதான பிரச்சினையாக தொழில் செய்வற்கு மூலதனப் பிரச்சினை அதற்கான காணிகள் தொடர்பில் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மிக விரைவில் உரியவர்களுடன் பேசி அதற்கான ஏற்பாடுகளை செய்துதருவதாக உறுதியளித்தார்.

மேலும் நன்னீர் மீனவர்களின் பிரச்சினையாகக் காணப்படும் தண்ணிமுறிப்பு குளத்தின் மீன்பிடி தொடர்பில் அமைச்சருக்கு எடுத்துக்கூறப்பட்டது. 


அத்தோடு முத்துயன்கட்டு குளத்திலும் விசுவமடு குளத்திலும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிற மீனவர்கள் மீன் குஞ்சுகள் விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்

தொடர்ந்து திருமுறுகண்டி பிள்ளையார் கோவில் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. முன்னர் ஆலயம் இருந்த நிலைமை தற்போது நடைபெறும் அபிவிருத்தி வேலைகள் , எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைகள் தொடர்பிலும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  எஸ்.குணபாலன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி பரமோதயன் ஜெயராணி,  முல்லைத்தீவு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்,மாவட்ட உதவித்திட்டமிடல் பணிப்பாளர், புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயலாளர் , மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர், மாவட்ட  நன்னீர் மீன்பிடி இணைப்பளர், ஏனைய துறைசார்ந்த உத்தியோகத்தர்கள், தொழில் முயற்சியாளர்கள், திருமுறிகண்டி கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top