பன்றி வெடிக்கு சிக்கி குடும்பத்தர் படுகாயமடைந்த நிலையில் சிகிக்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணவாளன் பட்ட முறிப்பு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தேன் எடுப்பதற்காக குறித்த நபரும் மேலும் சிலரும் காட்டுக்கு சென்றுள்ளனர். இதன்போது பன்றிக்காக வைக்கப்பட்ட வெடியில்
சிக்கியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில், படுகாயம் அடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.