அமெரிக்காவின் சௌத் கரோலினா மாநிலத்தில் நடைபெற்ற குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளருக்கான முன்னோடி வாக்கெடுப்பில் டொனால்ட் ட்ரம்ப் அபார வெற்றி பெற்றுள்ளார்.
அவருக்கு எதிராகப் போட்டியிட்ட நிக்கி ஹேலி தொடர்ந்து முயற்சி செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
டிரம்புக்கு 58 வாக்குகளும் ஹேலிக்கு 41 வீத வாக்குகளும் கிடைத்தன. ஹேலி சௌத் கரோலினா மாநிலத்தின் முன்னாள் ஆளுநராவார்.
அடுத்த மாதம் 5ஆம் திகதி 15 மாநிலங்களில் மில்லியன் கணக்கானோர் வாக்களிக்கவுள்ளனர்.
ட்ரம்ப் இதுவரை நடைபெற்ற எல்லா முன்னோடி வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்று குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தகுதி பெறுவதை நெருங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.