யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு இடம்பெற்ற பாடகர் ஹரிஹரனின் இசைநிகழ்ச்சியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் ஏற்பட்ட சன நெரிசலின் காரணத்தினால் பலர் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நிகழ்வை பார்வையிட வருகைத்தந்திருந்த பார்வையாளர்கள் கட்டுப்பாடுகளை மீறி நடந்துகொண்டமையினாலே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த இசைநிகழ்ச்சி சில நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டது.