கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி உள்ளிட்ட நாட்டின் பல மாவட்டங்களில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ள தாகவும் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு தரம் குறைந்துள்ளதாகவும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் இந்த நிலைமை மிக அதிகமாக காணப்படுவதாகவும் காற்றின் தரக் குறியீட்டிற்கு இணங்க நாட்டில் நுவரெலியா மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் காற்றின் தரம் பலவீனமானவர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் மட்டத்தில் காணப்படுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, யாழ் உட்பட பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் வீழ்ச்சி..!!
February 12, 2024
0
Tags
Share to other apps